Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – எருமாடு

தினம் ஒரு ஊர் – எருமாடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – பந்தலூர்
பரப்பளவு – 2734.69 ஹெக்டேர்
மக்கள் தொகை – 15,695
ஆண்கள் – 7,668
பெண்கள் – 8,027
குடும்பங்கள் – 3,855
தொழில் – விவசாயம்

எருமாடு (Erumad) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பந்தலூரில் உள்ள வட்டத் தலைமையகத்திலிருந்து தோராயமாக 23 கிமீ தொலைவில், கேரள எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. எருமாடு சுற்றியுள்ள கிராமங்களுக்கான வணிக மையமாகச் (சந்தைப் பகுதி) செயல்படுகிறது. எருமாடு கிராமத்தின் பொருளாதாரத்தில் தோட்ட விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு தேயிலை முக்கியமான பயிராகும். எருமாடு கிராமத்தின் விவசாயம் மழையைச் சார்ந்த மலைத்தோட்ட விவசாயம் என்ற தன்மையைக் கொண்டிருக்கிறது.
எருமாடு மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.
 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.