தினம் ஒரு ஊர் – எண்டப்புளி

எண்டப்புளி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
எண்டப்புளி (Endapuli) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தேனி மாவட்டத்தில், பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்டத் தலைமையிடமான தேனியிலிருந்து வடக்கே 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எண்டப்புளியின் முக்கிய பொருளாதார அடித்தளம் விவசாயம் ஆகும். விவசாயப் பொருட்களில் தேங்காய், மாம்பழம், வாழை மற்றும் கரும்பு முக்கியமானவை. மேலும் காபி, மிளகு, ஏலக்காய், கிராம்பு, எலுமிச்சை, ஆரஞ்சு, பலா, அவக்கோடா உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. கால்நடை வளர்ப்பு, கால்நடைத் தீவனப் பயிர்கள், பால் உற்பத்தி போன்ற துணைத் தொழில்களும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு உதவுகின்றன. தென்னைத் தோப்புகள், மாமரத் தோப்புகள், வாழைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் கிராமப்புற இயற்கை மற்றும் விவசாயக் காட்சிகளை விரும்புவோருக்கு இப்பகுதி அழகிய சூழலை வழங்குகிறது.
எண்டப்புளி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.