Additional information
| Book author | J. Sam Jebadurai |
|---|---|
| Publisher | Horeb Art Printers |
₹50.00
முன்னுரை!
இந்த 20-ம் நூற்றாண்டில், பல வகையான எழுப்புதல்களை, நாம் சந்தித்து விட்டோம். தேவ வார்த்தையின் எழுப்புதல், விசுவாச அறிக்கையின் எழுப்புதல், குணமாக்கும் எழுப்புதல், பேரின்பப் பெருவிழா எழுப்புதல் என்று, பல வகையான எழுப்புதல்களை தேசம் கண்டுவிட்டது.
கர்த்தருடைய வருகைக்கு முன்பாக, அபிஷேகத்தோடு ஜெபத்தின் எழுப்புதலுக்குள் கடந்து வாருங்கள். ஆத்தும நேசரின் மார்பிலே சார்ந்து, ஜெபிக்க வேண்டும், துதிக்க வேண்டும், மனமகிழ வேண்டும் என்ற ஏக்கமும், விருப்பமும், உங்களுக்கு அதிகமாயிருக்கட்டும்.
ஜெபத்தோடு கலந்த, அன்பின் எழுப்புதல் வரட்டும். ஆனந்தத் தைலம் உங்கள்மேல் ஊற்றப்படும்போது, ஆவியோடும், உண்மை யோடும், கர்த்தரை தொழுதுகொள்ள, ஆரம்பித்து விடுவீர்கள்.
1903-ம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள வேல்ஸ் தேசத்தில், பலத்த எழுப்புதல் ஏற்பட்டது. ஆறு மாதங்களுக்குள், எத்தனையோ இலட்சம் ஜனங்கள், இரட்சிக்கப்பட்டார்கள். அந்த எழுப்புதலுக்கு காரணம், அங்கேயிருந்த முந்நூறு ஜெபக்குழுக்களேயாகும்.
அந்த ஜெபவீரர்கள், தங்கள் இருதயத்தை கிழித்து, கர்த்தருடைய பாதத்தில் விழுந்து, ஜெபித்தார்கள். அப்போது வல்லமையான எழுப்புதல் வெடித்தது. இதினால் எங்கும் அதிகமான ஜெபக்குழுக்கள் உண்டாயின. அவர்கள் கர்த்தருடைய முகத்தை, ஆவியோடும், உண்மையோடும் தேடினார்கள். |
இந்தியா தேசத்திலே, ஒரு பெரிய எழுப்புதலை எதிர்பார்க்கிறோம். ஜெபத்தால் மட்டுமே, அந்த எழுப்புதலைக் கொண்டுவர முடியும். ஆகவே, எழுப்புதலுக்காக ஜெபியுங்கள். ஜெபக்குழுக்களை உண்டாக்குங்கள்.
கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறதே!
சகோ. J. சாம் ஜெபத்துரை
Out of stock
| Book author | J. Sam Jebadurai |
|---|---|
| Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.