Additional information
| Book author | J. Sam Jebadurai |
|---|---|
| Publisher | Horeb Art Printers |
₹50.00
முன்னுரை!
கர்த்தருடைய பெரிய கிருபையினால், இயேசு கிறிஸ்துவினுடைய பன்னிரண்டு சீஷர்களைக் குறித்து, அதிகமாக அறிய முற்பட்டேன். அவர்கள் கர்த்தருக்காக எவ்வளவு வைராக்கியம் பாராட்டி, இரத்த சாட்சியாய் மரித்தார்கள் என்ற விபரங்கள், அவர்களை மென்மேலும் அறிய வேண்டுமென்ற ஆசையைத் தூண்டியது.
அதற்காக, அநேக சரித்திர புத்தகங்களையும், ஆதார சான்று களையும் தேடித் தேடி வாசித்தேன். பல தேவனுடைய ஊழியக் காரர்கள், சீஷர்களைப் பற்றிப் பேசிய செய்திகளைக் கேட்டேன். அவைகள் என்னுடைய உள்ளத்தில், அக்கினியைப் பற்ற வைத்தது.
பிறகு, எங்களுடைய சபையான ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயத்தில் சீஷர்களைக் குறித்து, ஒவ்வொரு புதன் கிழமையும் வேதபாடம் நடத்தினேன். கர்த்தர் எனக்குக் கொடுத்த நல்ல செய்திகள், தமிழ் பேச அறிந்திருக்கிற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டு மென்று விரும்பினதினால், இந்த புத்தகத்தை உங்களுடைய கைகளிலே தந்திருக்கிறேன். – முதல் புத்தகத்திலே, இயேசுவினுடைய சீஷர்களாகிய அப். யோவான், பேதுரு, யாக்கோபு, அந்திரேயா ஆகிய நான்கு சீஷர்களைக் குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து மற்ற எட்டு சீஷர்களைப் பற்றிய குறிப்புகளையும், தேவ செய்திகளையும், இத்துடன் கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, ஆலயங்களில் வேதபாடம் எடுக்க விரும்பும், ஒவ்வொரு கர்த்தருடைய ஊழியக் காரர்களுக்கும்கூட, மிகவும் பிரயோஜனமாயிருக்கும். வாங்கி வாசி யுங்கள். புத்தக ஊழியத்தை ஊக்குவியுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. J. சாம் ஜெபத்துரை
| Book author | J. Sam Jebadurai |
|---|---|
| Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.