Daily Updates

தினம் ஓர் ஊர் – உத்தமபாளையம் (Uthamapalayam) – 07/10/23

தினம் ஓர் ஊர் – உத்தமபாளையம் (Uthamapalayam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 434,813

கல்வியறிவு – 71.64 %

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – கம்பம்

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan

நகராட்சி தலைவர் –  Sis. B.Renupriya

நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam

Principal District Judge  – Sis. K. Arivoli

Judicial Magistrate  – Bro. A.Ramanathan (Uthamapalayam)

Subordinate Judge  – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)

District Munsif  – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)

ஜெபிப்போம்

உத்தமபாளையம் (Uthamapalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தேனி – கம்பம் சாலையில் உள்ளது. இவ்வட்டம் கம்பம், சின்னமனூர் மற்றும் கூடலூர் என மூன்று நகராட்சிகள் கொண்டது. உத்தமபாளையம் பேரூராட்சிக்காகவும் அதன் வளர்ச்சி பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

உத்தமபாளையம் நகர் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.  நகராட்சி ஆணையர்  Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியானது 9 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 121 தெருக்களும் கொண்டுள்ளது. உத்தமபாளையம் டவுன் பஞ்சாயத்தில் 434,813 மக்கள் உள்ளனர். இதில்  216,730 ஆண்கள் மற்றும் 218,083 பெண்கள் இருக்கிறார்கள். . 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,074 ஆண்கள் மற்றும் 17,742 பெண்கள். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

இந்த தாலுகாவில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் முகமது பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மிகவும் பிரபலமானவை. HKRH என்ற பெயரில் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தமபாளையத்தில் ஆண்களின் கல்வியறிவு 90.14% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 81.05% ஆகவும் உள்ளது. உத்தமபாளையத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். மாணவர்களுக்காக, ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.

கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உத்தமபாளையம் பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. முல்லைப் பெரியாறு ஆறு இந்த நகரின் ஈர்ப்புகளில் ஒன்றாகும். உத்தமபாளையத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். தொழிலில் கர்த்தர் வளர்ச்சியை கொடுக்கும்படி ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கிற வேலைகளில் கர்த்தருடைய பாதுகாப்பு கரம் அவர்களோடே இருந்து வழிநடத்திட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.