தினம் ஒரு ஊர் – சின்னமனூர்

சின்னமனூர் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
சின்னமனூர் (Chinnamanur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். சின்னமனூர் அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்: சுருளி அருவி, ஹைவேவிஸ் – மேகமலை எஸ்டேட், சோத்துப்பாறை அணை, சின்ன சுருளி, வைகை அணை, தேக்கடி (கேரளா).
சின்னமனூர் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.