Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கம்பம்

தினம் ஒரு ஊர் – கம்பம்
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
பரப்பளவு – 6.58 Sq.Km.
மக்கள் தொகை – 68,090
ஆண்கள் – 33,848
பெண்கள் – 34,242
குடும்பங்கள் – 18,567
தொழில் – விவசாயம், சுற்றுலா

கம்பம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,

கம்பம் (Cumbam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திலிருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கம்பம் என்பது மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கு ஆகும். மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். இப்பகுதியில் நெல், தென்னை, நிலக்கடலை மற்றும் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கம்பம் தேங்காய், திராட்சை மற்றும் ஏலக்காய் வர்த்தகச் சந்தைக்குப் பெயர் பெற்றது. கம்பத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சுருளி நீர்வீழ்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான முக்கிய நீர் ஆதாரம் பெரியாறு ஆகும்.

கம்பம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.