Appam, Daily Updates

தினம் ஒரு ஊர்- வடகரை

தினம் ஒரு ஊர்– வடகரை
மாவட்டம்– தேனி
வட்டம்– பெரியகுளம்
பரப்பளவு– 2292.41 ஹெக்டேர்
மக்கள் தொகை– 6,367
ஆண்கள்– 3,163
பெண்கள்– 3,204
குடும்பங்கள்– 1,668
தொழில்– விவசாயம், சுற்றுலா

வடகரை கிராமத்துக்காக ஜெபிப்போம்,

வடகரை (Vadagarai) தமிழ்நாடு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பெரியகுளம் சிறப்பில் ஒன்றாக விளங்கும் வராக நதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நதியாகும். வைகை ஆற்றின் துணை நதியான வராகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சோத்துப்பாறை அணை, பெரியகுளத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வரும் வராகநதி, வடகரை மற்றும் தென்கரை என இரண்டு கிராமங்களாகப் பிரிக்கிறது. இப்பகுதியில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வராக நதி, சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இப்பகுதி நெல் விவசாயத்திற்குப் பெரிதும் உதவுகிறது. பெரியகுளம், வடகரையில் “வடகரை ஜமீன் அரண்மனை” அமைந்துள்ளது. இந்த அரண்மனை வடகரை ஜமீன்தாரர்களால் நிர்வகிக்கப்பட்டது. மேலும் இது பழமையான கட்டிடக்கலையை பறைசாற்றும் ஒரு முக்கிய அடையாளமாகும்.

வடகரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.