Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – ஜெயமங்கலம்

தினம் ஒரு ஊர் – ஜெயமங்கலம்
மாவட்டம் – தேனி
வட்டம் – பெரியகுளம்
பரப்பளவு – 3444.16 ஹெக்டேர்
மக்கள் தொகை – 16,706
ஆண்கள் – 8,730
பெண்கள் – 7,976
குடும்பங்கள் – 4,343
தொழில் – விவசாயம், சுற்றுலா

ஜெயமங்கலம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,

ஜெயமங்கலம் (Jeyamangalam) தமிழ்நாடு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். வராக நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இது பெரியகுளம் வழியாக சென்று ஜெயமங்கலம் உள்ளிட்ட கிராமப்புறங்கள் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. ஜெயமங்கலம் கிராமம், விவசாயத்திற்கு மிகவும் புகழ்பெற்ற ஒரு செழிப்பான பகுதியாகும். பெரியகுளம் வராக நதி மற்றும் வைகை ஆற்றின் படுகைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது.

ஜெயமங்கலம் பகுதியில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. இப்பகுதி ஜெயமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஜெயமங்கலம் பகுதி வெற்றிலை உற்பத்திக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களும் அமோகமாக விளைவிக்கப்படுகின்றன.

ஜெயமங்கலம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.