தினம் ஒரு ஊர் – முள்ளிகூர்

தினம் ஒரு ஊர் – முள்ளிகூர்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குந்தா
பரப்பளவு – 17005.08 ஹெக்டேர்
மக்கள் தொகை – 5393
ஆண்கள் – 2680
பெண்கள் – 2713
குடும்பங்கள் – 1,363
தொழில் – விவசாயம், சுற்றுலா
முள்ளிகூர் (Mulligoor) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் குந்தா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது துணை மாவட்ட தலைமையகமான குந்தாவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்ட தலைமையகமான ஊட்டியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முள்ளிகூரில் முக்கிய பயிர் தேயிலை சாகுபடி ஆகும். முள்ளிகூரைச் சுற்றியுள்ள இந்தப் பகுதி வனவிலங்குகள் நிறைந்ததாகவும் உள்ளது. இந்தக் கிராமத்தின் பிரதான மொழி படகா ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சி, முள்ளிகூரின் காடுகளில் பூக்கிறது.
முள்ளிகூர் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.