தினம் ஒரு நாட்டின் மாநிலம் – தகாமகா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – தகாமகா
நாடு – செஷல்ஸ் (Seychelles)
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 14.4 கிமீ²
மக்கள் தொகை – 2,850
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், பிரெஞ்சு, செஷல்ஸ் கிரியோல்
தொழில் – விவசாயம், மீன்பிடித்தல், சுற்றுலா
ஜெபிப்போம்,
தகாமகா (Takamaka) என்பது செஷல்ஸ் குடியரசின் மஹே தீவில் அமைந்துள்ள 26 நிர்வாக மாநிலங்களில் ஒன்றாகும். இது மஹே தீவின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலும் பாரம்பரிய விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. சுற்றுலாத் துறை சார்ந்த சில அடிப்படை வசதிகளும் இங்கு உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பாலோர், தனியார் வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட சேவை மற்றும் வர்த்தகத் துறைகளிலேயே பணிபுரிகின்றனர்.
தகாமகா மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.