தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மவான்சா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மவான்சா
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 25,233 கிமீ²
மக்கள் தொகை – 3,699,872
தலைநகரம் – மவான்சா நகரம்
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்,
மவான்சா (Mwanza), தான்சானியாவின் 31 நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதி விக்டோரியா ஏரியின் தென்கரையில் அமைந்துள்ளது.
மவான்சா மாகாணத்தில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, அரிசி ஆகியவை மிகவும் பொதுவான பயிர்களாகும். மவான்சா முழுவதும், பருத்தியே மிகவும் பொதுவான பணப் பயிராகும். மவான்சா மாகாணத்தில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரித் தீவான உகெரேவே தீவும், தான்சானியாவின் மிகச்சிறிய தேசிய பூங்காவான சானானே தீவு தேசிய பூங்காவும் அமைந்துள்ளன. இப்பகுதியில் காணப்படும் முக்கிய ஆறுகள்: மோமே ஆறு, இசாங்கா ஆறு, மிரோங்கோ ஆறு, நியாருவா ஆறு மற்றும் நெடெமாபோலியா ஆறு.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.