தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மன்யாரா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மன்யாரா
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 44,522 கிமீ²
மக்கள் தொகை – 1,892,502
தலைநகரம் – பாபாட்டி
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – சுரங்கத் தொழில், சுற்றுலா
ஜெபிப்போம்,
மன்யாரா (Manyara), தான்சானியாவின் 31 நிர்வாக மாநிலங்களில் ஒன்றாகும்.
மன்யாரா மாநிலத்தின் பொருளாதாரம், மெரெரானி மலைகளில் இருந்து டான்சனைட் இரத்தினக்கற்களை அகழ்ந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. இப்பகுதியில் முழுமையாக அமைந்துள்ள தாரங்கிரே தேசியப் பூங்கா மற்றும் மன்யாரா ஏரி தேசியப் பூங்கா ஆகியவற்றின் சுற்றுலாவும் பிற வருமான ஆதாரங்களாகும். மன்யாரா ஏரி, இப்பகுதியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மன்யாரா மாநிலத்தின் மிக உயரமான மலை ஹனாங் மலை ஆகும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.