தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஜெண்டூபா

ஜெபிப்போம்,
ஜெண்டூபா (Jendouba), துனிசியாவின் 24 மாநிலங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் வடமேற்கு துனிசியாவில் உள்ள டெல் அட்லஸின் உயரமான மலைகளில், அல்ஜீரியா மற்றும் மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ளது.
ஜெண்டூபா மாநிலத்தின் பொருளாதாரம் முதன்மையாக தானியப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சந்தைத் தோட்டக்கலை மற்றும் மரம் வளர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஜெண்டூபா மாநிலத்தின் முக்கிய ஈர்ப்புகளில் புல்லா ரெஜியா மற்றும் செம்டூ போன்ற பன்முக தொல்பொருள் பாரம்பரியத்தை மையம், எல் ஃபெய்ஜா தேசியப் பூங்கா, குரூமிரி மலை, அல்-அப்யாத் மலை, துனிசியாவின் ஒரே வற்றாத நதியான மெட்ஜெர்டா ஆறு ஆகியவை அடங்கும். இப்பகுதியில் ஒரு கோல்ஃப் மைதானமும் படகுத்துறையும் உள்ளன.
இந்த மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.