தினம் ஒரு ஊர் – ஸ்ரீமதுரை

தினம் ஒரு ஊர் – ஸ்ரீமதுரை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கூடலூர்
பரப்பளவு – 1122.22 ஹெக்டேர்
மக்கள் தொகை – 6,159
ஆண்கள் – 3,055
பெண்கள் – 3,104
குடும்பங்கள் – 1,559
தொழில் – விவசாயம்
ஸ்ரீமதுரை (Sree Madurai) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது கூடலூரில் உள்ள வட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கைச் சூழலுடன் இணைந்துள்ள ஸ்ரீமதுரை, பசுமையான காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் பல்வேறு பழங்குடியின சமூகங்களின் வாழ்வியலால் தனித்துவம் பெறுகிறது. குறிப்பாக பெட்டக்குறும்பா, காட்டுநாயக்கன், பணியர் போன்ற பழங்குடியின சமூகங்களின் குடியிருப்புகள் இப்பகுதியுடன் தொடர்புடையவை.
ஸ்ரீமதுரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.