தினம் ஒரு ஊர் – ஓடைப்பட்டி

ஓடைப்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
ஓடைப்பட்டி (Odaipatti) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. ஓடைப்பட்டி பகுதி விதையில்லா திராட்சை உற்பத்திக்கு உலகளவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு விளையும் உயர்தர திராட்சை பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாழை, தென்னை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்களும் இப்பகுதியில் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள விவசாய கிராமங்களின் வாழ்வாதாரமாக சண்முகநதி அணை விளங்குகிறது. மேகமலை குன்றுகளின் அடிவாரத்தில், ராயப்பன்பட்டி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த அணை.
ஓடைப்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.