தினம் ஒரு ஊர் – உலிக்கல்

தினம் ஒரு ஊர் – உலிக்கல்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குன்னூர்
பரப்பளவு – 35.41 Sq.Km.
மக்கள் தொகை – 12960
ஆண்கள் – 6440
பெண்கள் – 6520
குடும்பங்கள் – 4201
தொழில் – விவசாயம், சுற்றுலா
உலிக்கல் (Hulical) நீலகிரி மலைகளின் அற்புதமான தாவர மற்றும் விலங்கின வளங்களைக் கொண்ட குன்னூர் வட்டத்திலுள்ள கிராமம் ஆகும். இது உதகமண்டலத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது வளர்ந்து வரும் தேர்வு நிலை பேரூராட்சியாகும். அதன் கண்கவர் இயற்கை அழகும், செழுமையான கலாச்சாரப் பாரம்பரியமும் பயணிகளைத் தன்பால் ஈர்க்கும் ஒரு தவிர்க்க முடியாத வசீகரத்தை உருவாக்குகின்றன. இப்பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.
உலிக்கல் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.